அழுக்கான அந்தரங்கங்கள்
ஆயுள் முழுதும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஒவ்வொரு பெண்ணின் கதையும் காட்டும் இந்த சுயசரிதையான நாட்டிய குறும்படம்.முழுவதும் பெண்களால் உருவாக்கப்பட்ட இந்த குறும்படம், கிழக்கில் மட்டுமல்ல மேற்கத்தைய கலாசாரத்திலும் நடைமுறையிலுள்ள பாலியல் சீண்டல்களை எடுத்துக் காட்டும் படம். இந்தியா, மலேசியா, மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சி. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த படம் அமைந்துள்ளது. #dirtysecretsshortfilm
குழு
முழுவதும் பெண்களால் (சில பெண்ணுறிமை பேணும் ஆண்களின் உற்சாகத்தினால்) உருவாக்கப்பட்டுள்ளது இந்த குறும்படம்
இயக்குநரின் பதிவு
பன்னிரண்டு கோடி மக்கள் கொண்ட சென்னை மாநகரில் பிறந்த நான் இப்போது லூயிவில், கெண்டகீயில் வசித்து வருகிறேன். இந்தியாவின் தேசிய அளவு பரதநாட்டிய போட்டியில் மூன்று முறை பரிசு வென்றிருக்கிறேன். 2022-ல் என்னுடைய சமூக சிந்தனை சார்ந்த நாட்டிய முயற்சிகளுக்காக Dance/USA Fellowship வழங்கப்பட்டது. இந்த அழகிய நடன வடிவத்தின் சாதி, சமய மற்றும் பெண்ணுரிமை சிக்கல்களை விலக்கி இன்றைய அன்றாட போராட்டங்களை எடுத்துக் கூறுகிறேன்.
அழுக்கான அந்தரங்கங்கள் பெண்கள் படும் பாலியல் தொல்லைகளை எடுத்துக் காட்டும் படம். என்னுடைய சுயசரிதை தான் ஆனால் அனேகம் பெண்களின் கதையும் கூட. ஒவ்வொரு முறையும் பாலியல் கொடுமைகளைப் பற்றி கேள்விப்படும் போது விரல் நுனிகளில் வியாக்கியானம் பேசுகிறோம். வரவேர்ப்பறையிலும் வலைதளத்திலும் விவாதம் செய்கிறோம். ஆனால் என்னுடைய அவா அழுக்கான அந்தரங்கங்கள் எழுச்சிக்கு வித்திடும் படமாக அமைய வேண்டும் என்பதே.